ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், மார்ச் 11

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.

இந்த தாக்குதலுக்கு ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர். இது மிகவும் மோசமான செயல் என்று கூறினார். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என்று ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க கூடும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேனட் யெலன் கூறுகையில், உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷ்யா செய்யும் அட்டூழியங்கள் தீவிரமடைந்து வருவதாகத் தெரிகிறது, எனவே அவர்கள் மீது கூடுதல் தடைகளைக் கருத்தில் கொள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது பொருத்தமானது” என்று யெலன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்றுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை “பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன” என்று கூறினார்.

Leave a Reply