உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!- திருமலையில் முன்னெடுப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆ‌ம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆ‌ம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் அமைந்துள்ள பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று (03) மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.

காலநிலை மாற்றம், உயிர்ப்பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதினால் தெளிவூட்டப்பட்டன. 

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply