தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக குறிப்பிட்ட நீங்கள் தற்போது அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள்! – ஆளும் தரப்பை விமர்சித்த நாமல்

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக  தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள். தற்போதும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு  சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை நான் ஆரம்பத்தில் கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் அந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமல் கடுமையாக விமர்சித்தார்கள். 

ஆனால் இன்று அவர்களே  சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். 

தனிப்பட்ட தரவுகள் முறையாக ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தரவுகளை தமது விருப்பத்துக்கு அமைய  நிர்வகிக்க முடியாது. 

டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கத்துக்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்.

அரச சேவையாளர்களை திருடர்கள் என்றும் விமர்சிக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளியுள்ளது. 

விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல்  டிஜிட்டல் மயமாக்கலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் அதற்கான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம். 

தரவு பாதுகாப்பு சட்டத்தால்  தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு  செல்லும் என்று  கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள். இந்த குற்றச்சாட்டை தற்போது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார். 

Leave a Reply