வேலணை பிரதேச சபையால் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

வேலணை பிரதேச சபையின் பிரதேச ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. 

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு  வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது பிளாஸ்டிக்,பொலித்தீன் உள்ளிட்ட குப்பைகள்  குறித்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டன. 

வேலணை பிரலதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. 

Leave a Reply