
கொழும்பு, மார்ச் 11
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகியமையினால் மக்கள் அவதியுறுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் எடுத்த தீர்மானத்தினால் அமைச்சு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அவசர அவசரமாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முடியாது என சங்கத்தின் இணைப் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் அமைச்சுப் பதவிகளில் இருந்து வாசுதேவ நாணயக்கார இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.




