சம்பூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா கலப்பை அண்டிய காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று(05)  மாலை முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளனர்.

இதன்போது 3 இலட்சத்தி 60 ஆயிரத்தி 750 மில்லி லீற்றர் கோடா, 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு போன்றவற்றுடன் 30 மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகம் நபர்கள் இருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Leave a Reply