கச்சதீவுத் திருவிழாவில் பங்குகொள்ளும் 80 தமிழக யாத்திரிகர்களை ஏற்றிய 4 படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் போலீசாரின் தீவிர சோதனையின் பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
இந்த நிலமையில் இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 70 யாத்திரிகர்களும் 10 மதகுருக்களுமாக, மொத்தம் 80 பேர் பயணித்துள்ளனர்.
இதேநேரம் இந்திய யாத்திரிகர்கள் 50 பேருக்கு மட்டுமே கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இறுதி நேரமே 100 பேருக்கான அனுமதி கிட்டிய காரணத்தினால் 100 பேர் பயணிக்க முடியவில்லை என தமிழக யாத்திரிகர்கள் தெரிவிக்கின்றனர்.





