
வடக்கு மாகாண மீனவர்களிற்கு சீனாவைத் தொடர்ந்து இந்திய அரசாங்கமும் 13ஆம் திகதி நிவாரணப் பொதி வழங்கவுள்ளது.
இதன் முதல் கட்டமாக நாளை யாழ்ப்பாணம் வரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே யாழ்ப்பாண மீனவர்களிற்கு நிவாரணம் பொதிகளை வழங்கி வைக்கவுள்ளார்.
சீன அரசாங்கம் வழங்கிய பொதிகள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவை என்பதனால் இந்திய அரசு 5 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியில் பொதியினை தயார் செய்துள்ளனர்.
இவ்வாறு நாளை மறுதினம் யாழில் வழங்கவுள்ள பொதிகளிற்காக 660 பொதிகள் யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பூற் சிற்றியில் இருந்து மீன்பிடி அமைச்சரின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.




