உக்ரைனிலிருந்து வெளியேற 27 இலங்கையர்களுக்கு  மறுப்பு!

உக்ரைனிலிருந்து வெளியேறிய 39 இலங்கையர்களில் தற்போது 27 பேர்  வெளியேற முடியாது எனத் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான விவகாரத்தை கையாளும் பொறுப்பு துருக்கியிலுள்ள இலங்கை தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கான  சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்தனர். மாணவர்கள்தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். போலந்து, ருமேனியா, மோல்டோவா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதிகளவானோர் ஜேர்மனுக்குச்  சென்றுள்ளனர். அவர்களுக்கான  அனைத்து வசதிகளையும் இலங்கை  தூதரகம் செய்துகொடுத்துள்ளது.
தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது உக்ரைனில் இருந்து வெளியேற முடியாதென எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply