ஹெரோய்னுடன் கைதானவரிடம் 170 சைக்கிள்களும் மீட்பு…!

மட்டக்குளிய ராவத்த பகுதியில்  ஹெரோய்னுடன் கைதான சந்தேகநபரிடம் 170 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து  மட்டக்குளிய  ராவத்த  சாலைப் பகுதியில் நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட  சோதனையின்  போது, ​​நபரொருவர்  ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 15 இடத்தைச் சேர்ந்த 45 வயதான சந்தேகநபர் என்றும் அவரிடமிருந்து  6.6 கிராம் ஹெராய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

 

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள்  மூலம்  சந்தேகநபரின்  வீட்டிற்கு  பொலிஸார்  சென்றனர்.  அங்கு திருடப்பட்டதாகவும், உரிமையை உறுதிப்படுத்தாததாகவும் சந்தேகிக்கப்படும் 170 சைக்கிள்கள் மீட்கப்பட்டு  பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் சந்தேகநபர்  தற்போது மட்டக்குளிய  பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply