யாழ்ப்பாணம் குருநகர், சீனோர் கடல்சார் உபகரண உற்பத்தி நிறுவன ஊழியர்கள், சம்பளம் வழங்குவதில் உள்ள தாமத நிலையை சீர் செய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே, ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்கு போன்று வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.இங்கே மூலப் பொருட்கள் இல்லை.
ஆகவே உற்பத்தி மற்றும் வேலையின் அளவு குறைந்துள்ளது.
இன்று வரை கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை.கடந்த 4 மாதங்களாக இந்த நிலைமை தான் நீடிக்கிறது.
அன்றாடம் கடையில் பொருட்களை வாங்கி எமது வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.
பலசரக்கு கடையில் கடனும் வாங்க முடியாது.இங்கே பல கறுத்த ஆடுகள் உள்ளது.
இப்படி நாம் கதைத்தால் எம்மை பழிவாங்குவார்கள் .25 ஆம் திகதி எமது சம்பள நாள்.
அந்த திகதியில் எமக்கு சம்பளம் கிடைக்க வேண்டும் என்றனர்.






