கறிவேப்பிலை பறிக்க சென்ற தாய் பலி – நடந்தது என்ன?

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கறிவேப்பிலை பறிக்க சென்ற தாய்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல, ரொட்டவெவ பகுதியில் வசிக்கும்   55 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது 

உயிரிழந்த பெண் நேற்று ரொட்டவெவ காட்டுப் பகுதிக்கு கறிவேப்பிலை பறிப்பதற்காக சென்றிருந்தபோது கட்டுத்துவக்கு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நிலையில் எப்பாவல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் சடலம் எப்பாவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply