
நாட்டின் நிலையை தெளிவுபடுத்த முதலில் நிதி அமைச்சரை சபைக்கு வரச் சொல்லுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளது.
இரவோடு இரவாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இந்த விலைக்கு பொருட்களை யார் வாங்குவார்கள்? இதனை பொருட்படுத்தாமல் அரசு பேசாமல் இருக்கிறது.
நாட்டின் நிலை தொடர்பில் தெளிவு படுத்த நிதி அமைச்சர் இங்கே வர வேண்டும்.
அண்ணன், சின்னண்ணன் ,தம்பி உறவை எல்லாம் வெளியே வைத்து விட்டு இங்கே வரச் சொல்லுங்கள்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பார்த்து ரசிக்க இங்கே நாம் அவரை வரச் சொல்லவில்லை.
நாட்டின் நிலைமையை அவர் தான் தெளிவு படுத்த வேண்டும் .அவருக்குத் தான் பொறுப்பு உண்டு .
நாட்டின் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது.வரவு செலவுத் திட்ட வாசிப்புக்கு பின்னர் அவரைக் காணவில்லை .நிதியை கையாளும் அதிகாரம் சபைக்கு உள்ளது என்றார்





