அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் குரல் இனிமையானது – சபையில் கிண்டல்

நண்பர் அனுர எனது குரலை பாராட்டியுள்ளார் என அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் இன்று கிண்டலாக உரையாடியுள்ளார்.

சபையில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க,

ஒவ்வொரு ஆசனத்தில் அமரும் போது அதற்கு ஏற்ற வகையில், நண்பர் தினேஷ் குணவர்தனவின் குரல் மாறுபடுகிறது.

அவரின் குரல் மிகவும் இனிமையானது. அவரின் உயர்ஸ்தாயி மிகவும் அழகாக இருக்கும். அருகில் இருக்கும் போது அதை நான் உணர்ந்தேன் என்றார்.

இதற்கு, நண்பர் அனுர எனது குரலை பாராட்டியுள்ளார்.அவருக்கு தான் இவை புரியும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன கிண்டலாக பதில் வழங்கியுள்ளார்.

Leave a Reply