சிவகங்கையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப்பந்தயம்

சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே மித்ரா வயலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 39 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சின்ன மாட்டில் 20 ஜோடிகளும், நடு மாட்டில் 10 ஜோடிகளும் பெரியமாட்டில் 9 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

இந்த நிலையில் சின்ன மாட்டிற்கு 6 கிலோமீட்டர் ,நடு மாட்டிற்கு 7கிலோ மீட்டர் தூரமும், பெரிய மாட்டிற்கு 8 கிலோ மீட்டர் தூரமும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்ததது.

மேலும், மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

சீறிச்சென்ற காளைகளை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Leave a Reply