இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியது இந்தியா; 500 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.

பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்காக இலங்கையுடன் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதியன்று இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) உடன்படிக்கையில் ஈடுபட்டது.

எக்ஸிம் வங்கியின் மொத்தக் கடனில், குறைந்தது 75 சதவீத மதிப்புள்ள பொருட்கள், பணிகள் மற்றும் சேவைகள் இந்தியாவிலிருந்து விற்பனையாளரால் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 25 சதவீதப் பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியாவிற்கு வெளியே இருந்து விற்பனையாளர் அதாவது இலங்கை வாங்கலாம்.

கடன் வரியின் கீழ் உள்ள ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இலங்கை தற்போது கையிருப்பு வீழ்ச்சியுடன் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியில் தத்தளிக்கின்றது.

இறக்குமதிக்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாததால், கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply