1.08 மில்லியன் யுவானுக்கு ஏலம் போன லாபுபு பொம்மை!

மனித அளவிலான லாபுபு (Labubu) பொம்மை இந்த வாரம் 1.08 மில்லியன் யுவானுக்கு ($150,324; £110,465) விற்பனையானதாக சீன ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

131 செ.மீ (4 அடி 4 அங்குலம்) உயரமுள்ள இந்த பொம்மை பெய்ஜிங்கில் நடந்த யோங்கிள் சர்வதேச ஏலத்தில் விற்கப்பட்டது.

இப்போது அதுதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பொம்மை என்று ஏலதாரர்கள் கூறினார்.

லாபுபு பொம்மைகள் என்பது ஹொங்கொங் கலைஞர் கேசிங் லங் என்பவரால் பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விசித்திரமான அசுர கதாபாத்திரங்கள்.

இவை பல பிரபலங்களின் ஒப்பணைக்கு பின்னர் அண்மைய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளன.

சீன பொம்மை நிறுவனமான பாப் மார்ட்டால் விற்கப்படும் லாபுபு பொம்மைகளின் விலை பொதுவாக 50 யுவான் ஆகும்.

Labubu figurine is displayed before an auction in Beijing

இந்த வார ஏலம் முழுக்க முழுக்க லாபுபுவுக்கே அர்ப்பணிக்கப்பட்டது.

சுமார் 200 பேர் கலந்து கொண்ட நிகழ்வில் 48 பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

ஏல நிறுவனம் மொத்தம் 3.37 மில்லியன் யுவான் திரட்டியதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply