பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (16) மாலை 04:00 மணி வரை அமலில் இருக்கும்.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *