வடக்கிலுள்ள உணவகங்களும் மூடப்படும் நிலை

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வடக்கில் உள்ள மக்களும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் எரிவாயு பற்றாக்குறையால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய உணவகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு கொள்கலன் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் இன்றும் (11) காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்திருக்கின்றனர்.

எனினும் எரிவாயு இருப்பு முடிந்து விட்டதாக களஞ்சியசாலை பிரிவினர் கூறி, நாளையே வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply