சாமர சம்பத் எம்.பி மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு..!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சாமர சம்பத் தசநாயக்க மீதான நிதி முறைகேடு  தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சாமர சம்பத் தசநாயக்க கடந்த 2016 ஆம் ஆண்டு   இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில், மாகாண சபைக்குச் சொந்தமான நிலையான வைப்பு கணக்குகளை அவர் திரும்பப் பெற்றதால், அரசாங்கத்திற்கு  16 ரூபா மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. 

குறித்த  வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது  நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்கவும் விசாரணைக்காக நீதிமன்றத்தில்  முன்னிலையாகி இருந்தார். 

நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் சார்பாக ஆஜரான அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை . விசாரணையை முடித்து, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கை செய்ய ஒரு  திகதியை வழங்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரினர்.

அதனையடுத்து முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, வழக்கு எதிர்வரும்  நவம்பர்  (18), 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply