
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியுடன் ஏப்ரல் மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதற்காக பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல் ஏப்ரல் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் நிதியமைச்சரின் தரப்பும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்கவுள்ளதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை இணைத்துக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.




