
லண்டன், மார்ச் 11
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் ரஷ்யா அதிகளவிலான மனித இழப்புக்களைச் சந்தித்து வருவதாகவும் மேற்படி இழப்புக்களுக்குப் பதிலடியாக இரசாயனக் குண்டுகளை உக்ரைன் மீது வீசி பாரிய இரசாயனத் தாக்கங்களை விளாடிமிர் புடின் ஏற்படுத்துகின்றார் என பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்ய படையினர் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில் மேலும் உக்ரைன் மக்கள் மீது இரசாயனக் குண்டுகளை வீசி மக்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் வன்முறையை புடின் மேற்கொள்வதாகவும் இதற்கு அண்மையில் உக்ரைன் குழந்தை மற்றும் மகப்பேற்று வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் இரசாயனக் குண்டு என கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷ்யா இரசாயனக் குண்டுகளை பொழியுமாக இருந்தால் உக்ரைன் விரைவில் சுடுகாடாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




