விகாராதிபதியின் முறைப்பாட்டால் கைதான நபர் பிணையில் விடுதலை..!

மூதூர் 3ஆம் கட்டை மலை விகாராதிபதி,  நபர் ஒருவருக்கு எதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய (18)தினம் மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது குற்றம் சுமத்தப்பட்ட நபருக்காக ஆஜரான சட்டத்தரணி,

குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. 

பலாத்காரமாக 2015 காலப்பகுதியில் ஆயுத படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச் சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர்.

இன்றுவரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நபர், புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடங்களாக வழிபாட்டில் ஈடுபட்டார். 

கடந்த பொஷன் காலத்தில் விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார்.

இதனை குற்றம் சுமத்தப்பட்ட நபர் எதிர்த்ததால் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

எனவே, இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல். எனவே கட்சிக்காரரை விடுவிக்க கௌரவ மன்றை கோரினார். 

இதனையடுத்து நீதவான் அவருக்கு  பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply