யாழ்ப்பாணம் குருநகர், சீனோர் கடல்சார் உபகரண உற்பத்தி நிறுவன ஊழியர்கள், சம்பளம் வழங்குவதில் உள்ள தாமத நிலையை சீர் செய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே,ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்கு போன்று வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலக்தில்,கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது பிரச்சினை தொடர்பாக மஹயர் ஒன்றை கையளித்துள்ளனர்.






