வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் 

பாபு தேவ நந்தினி தலைமையில்  இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8 பேரும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 4 பேரும்,  தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும்,  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 2 பேரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தவிசாளர் தெரிவுக்கு கந்தையா யசீதனின் பெயரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதனுடயை பெயர்களும் முன்மொழியபட்டது.   

வாக்கெடுப்பின் இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று கந்தையா யசீதன்  தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் . அத்துடன் உப தவிசாளராக  இலங்கை தமிழரசு கட்சியின் பேரின்ப நாயகம் சுபாகர்  தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply