யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20) அமைச்சரவை செயலாளர் திரு. W. M. D. J. பெர்னாண்டோவால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
