
சஜித் அணியும் கோட்டா அணியும் ஊழல் விடயடங்களில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லையென ஜே.வி.பி இன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்று கூறிய கோட்டா அரசு இன்று என்ன செய்கிறது?
அதன் பின்னர் ஏழு மூளை உள்ள பசில் ராஜபக்ச வந்து நாட்டை முன்னேற்றுவார் என்று சொன்னார்கள்.
அவருக்கு மூளை தலையிலா அல்லது வேறு எங்காவதா இருக்கிறது என என்று தெரியவில்லை.
கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு நாட்டை திறந்து விடுவதற்காக அவர்கள் இப்போது முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சாராயம் குடிப்பவனுக்கு சாராயம் அத்தியாவசியப் பொருள் தான். அவர் அவர் தொழிலுக்கு அந்தப் பொருட்கள் தான் அத்தியாவசியம்.
அதையும் இப்போது தடை செய்து விட்டார்கள்.கோட்டா எப்போது ஆட்சிக்கு வந்தாரோ அப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து ஆரம்பித்து விட்டது.
இது தவிர மருந்து இறக்குமதியாளர்கள், மருந்து தட்டுப்பாடு நிலவும் என்றும், மற்றும் மருந்து விலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பாலும், தட்டுப்பாடு காரணமாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இப்போது மருந்து கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எந்தெந்த வழியில் மடியை நிரப்பலாம் என்ற நோக்கில் லஞ்ச ஊழல் மலிந்த நாடாக இது காணப்படுகிறது.
இதற்கு சளைச்சவர்கள் இல்லை என்றே சஜித் அணியும் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.





