ஜனாதிபதி நிதியம் தொடர்பான விசேட செயலமர்வு!

ஜனாதிபதி நிதியம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில்  சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  இன்று (21)நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் ஜூன் 21 இன்று முதல் நிகழ்நிலை மூலம் வழங்கப்படுகின்ற நிலையில் வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது. 

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே,ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களான பீ.எச். கொலம்பகே, பீ.ஆர். பிரசாத் பெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்ட  ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து  கொண்டனர்.

Leave a Reply