சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் சேறு பூசல்களில் ஈடுபட வேண்டாம்! ஹர்ஷன ராஜகருணா சீற்றம்

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் சேறு பூசல்களில் ஈடுபட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எவரேனும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாகவும் அவர்களுக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த பட்டியலில் தமது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன தெரிவித்துள்ளார். 

எனினும், தாம் எந்த வகையிலும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சொத்துக்கள் அனைத்துமே பெற்றோர் வழி சொத்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே  சேறுபூசல்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவர்  தெரிவித்துள்ளார்.  

Leave a Reply