பதுளை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் – சாரதி கைது

பதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த – திம்பிரிகஸ்பிட்டிய 4 ஆம் கட்டை பகுதியில், சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த விபத்தில், இரு பெண்களும் ஆண் ஒருவருவமாக மூவர் உயிரிழந்தனர். 

விபத்தில் காயமடைந்த மேலும் 33 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றனர். 

சிகிச்சை பெற்றுவரும் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே நேற்று விபத்துக்குள்ளானது. 

விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

பொலிஸ் விசாரணையில், விபத்து நேரத்தில் பேருந்தை சாரதியின் உதவியாளரே செலுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply