வடக்கு தென்னை முக்கோண வளர்ச்சிக்கு திட்டமிட்ட முன்னேற்றம் – இலவச கன்றுகள் வழங்கல் ஆரம்பம்!

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், வடக்கு மாகாணத்தில் தென்னை உற்பத்தியை வளர்க்கும் நோக்கில், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய “தென்னை முக்கோண வலயத்திற்கு” வலுவான செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் தொடக்கமாக, டிசம்பர் மாதத்துக்குள் 6,50,000 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

2030ம் ஆண்டு வரை நீடிக்கும் திட்டத்தின் லட்சியம், மொத்த தேங்காய் உற்பத்தியை 4,200 மில்லியனாக உயர்த்துவதாகும். 

தற்போது வரை 72,000 கன்றுகள் பயிற்சி மற்றும் உதவி நடவடிக்கைகள் உடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இரு வகை நடுகைத்திட்டங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம், வடக்கின் வேளாண் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

Leave a Reply