கச்சத்தீவு திருவிழாவுக்கு இலங்கைத் தரப்பினரும் பயணம்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையிலிருந்து கச்சதீவு செல்வதற்காக பொதுமக்கள் குறிக்கட்டுவானில் இருந்து புறப்பட்டனர்.

இன்று மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவானிலில் தரித்து நின்ற வடதாரகை மூலம் கச்சதீவு செல்வதற்கான படகு பயணத்தை, இலங்கை கடற்படை ஒழுங்கு செய்தது.

மதகுருமார்கள், பக்தர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக சிநேகபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக வடபகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்க பிரதிநிகளும் கச்சதீவுக்கு பயணமாகியுள்ளனர்.

Leave a Reply