மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் கிளிநொச்சியில் ஆரம்பம்

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் இன்று  கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் இன்று காலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன்  கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

“சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ,இன்று தொடக்கம் 27ம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply