மூதூர் பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசு கட்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த செல்வரெத்தினம் பிரகலாதன்  மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று  பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்றது. 

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக்  கட்சியைச் சேர்ந்த  செ.பிரகாலதன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.றிபான் போட்டியிட்டனர். 

இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சி சபையை கைப்பற்றியது. 

குறித்த சபையில் உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.டி.எம்.பைசர் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply