
இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது.
அதன்படி 24 கெரட் தங்க பவுண் ஒன்றின் விலை 141 000 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க ஆபரண தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




