வருடத்துக்கு 1000 ற்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகள்; முடிந்தவரை சேவையாற்றியுள்ளேன்- வைதிய கலாநிதி கோபிசங்கர் பெருமிதம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2014 முதல் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் 1000 க்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று  என்புமுறிவு சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி கலாநிதி கோபி சங்கர் தெரிவித்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணராக இதுவரையில்  கடமையாற்றிய வைத்திய காலாநிதி கோபிசங்கர், தற்போது  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு  பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இடமாற்றத்தை அடுத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருடத்திற்கு 4000 வரையிலான புது நோயாளர்களையும் 1300க்கு மேற்பட்ட பழைய நோயாளகளிற்குமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2021 வரை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மாதாந்த என்பு முறிவு சத்திரசிகிச்சை கிளினிக் மூலம் வருடந்தோறும் 4000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய இதுவரை காலமும் என்பு முறிவு தொடர்பான ஆலோசனைக்குழு உறுப்பினர் Member of NMRA committee for orthopaedic devices உள்ளிட்ட பல  பதவிகளில் என்னால் முடிந்த வரை பணியாற்றியுள்ளேன்.- என்றார்.

Leave a Reply