நாவிதன்வெளி பிரதேசசபையில் ஆட்சியமைத்தது தமிழரசுக்கட்சி!

அம்பாறை – நாவிதன்வெளி  பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது.  

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர்  தெரிவு,  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி  தலைமையில்  சபை மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக  இலங்கை தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் இந்திரன் ரூபசாந்தன் மற்றும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் குஞ்சரமூர்த்தி நிரொஜன் ஆகியோர் போட்டியிட்டனர். 

தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பில் இடம்பெற வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிய நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இந்திரன் ரூபசாந்தன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 

தவிசாளர் தெரிவையடுத்து  உப தவிசாளர் தெரிவில் சுயேட்சைக்குழு  சார்பில் உப தவிசாளர் வேட்பாளராக  குணநாதன் புவனரூபன்,  மற்றுமொரு சுயேட்சைக் குழு உறுப்பினரான  மொஹமட் அபூபக்கர் நாளீர் ஆகியோரது  பெயர்கள்  முன்மொழியப்பட்டன.  

இந்த நிலையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சுயேட்சைக்குழு உறுப்பினர்  குணநாதன் புவனரூபன் உபதவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply