மாணவர்களுக்கு கல்விசார் திட்டமிடல் கருத்தரங்கு!

யாழ்.பகவான் ஸ்ரீசத்ய சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில், க.பொ.த.உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ‘எதிர்கால துறைசார் திட்டமிடல் கருத்தரங்கு’ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலுள்ள ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

தாம் கல்வி கற்ற துறையில் சித்தியடைந்தோர் அல்லது தவறினாலோ மேற்கொண்டு எதிர்காலத்தில் எந்தத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்டால் தமது எதிர்காலத்தை வளப்படுத்தலாம் என்பதற்கு வழிகாட்டுவதற்காகவே குறித்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்கில் உயர்தரத்திற்குப் பின்னரான வாழ்வை வாழ்வது எப்படி?, திறந்த பல்கலைக்கழகத்தின் பாடத்துறைசார் வாய்ப்புகள், தொழில்நுட்பக் கல்லூரியின் பாடத்துறைசார் வாய்ப்புகள், தகவல் தொடர்பாடல் துறைசார் பாடத்தெரிவுகள் ஆகியன பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.

கருத்தரங்கில் வளவாளர்களாக யாழ்.பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு பணிப்பாளர் கே.தபோதரன், மென்பொருள் பொறியியலாளர் கே.நிமேஷனன், இலங்கை திறந்த பல்கலைக்கழக உதவிப் பணிப்பாளர் கே.கந்தவேல், தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் எஸ்.முகுந்தன், எச்.என்.பி வங்கி மனித வள முகாமையாளர் எஸ்.சுந்தரேஸ்வரன், எஸ்.எஸ்.கிறியேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சந்திரமௌலீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

துறைசார் வளவாளர்களின் வழிகாட்டுதல்களுடன் இடம்பெறவுள்ள கருத்தரங்கில், க.பொ.த.உயர்தரப் பரீட்சை எழுதி முடிவை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொள்ளலாம்.

ஆர்வமுடையவர்கள் தங்கள் பதிவை 0775933109 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களுக்கு மதிய உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply