
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாவா ரோயலி மண்டபத்தில் இது தொடர்பாக நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- பாரளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரப் தலைமையில் பொத்துவில், காரைதீவு, இறக்காமம் உள்ளிட்ட பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் அவரது அணியினரும் இணைந்துகொண்டனர்.