
நாட்டில் தேவையற்ற விடயங்களுக்கு செலவிடும் பணத்தை விதை ஆராய்ச்சியில் ஈடுபடும் நபர்களுக்கு வழங்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்வது தான் நாட்டின் தற்போதையை நிலையாக காணப்படுகிறது. இந்த நிலையை உற்பத்தி ஊடாக மாற்ற முடியும். இங்கே விதை மற்றும் பயிர்கள் தொடர்பில் பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு தாக்குப்பிடிக்க கூடிய வகையில், பல விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமது நாட்டிலேயே இந்த ஆராய்ச்சிகள் நடைபெற்றால் உணவு உற்பத்தியை நாமே சமாளித்துக் கொள்ள முடியும்.
நிதி இல்லாமல் ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு விதைகள் தான் எமது பலம். இலாபம் இல்லாத தொழில் துறைக்கு அள்ளி இறைக்கும் பணத்தை, இவ்வாறு விதை ஆராய்ச்சி, உணவு உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.- என்றார்.





