
கொடிகாமம்- கெற்பேலி வன்னியர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினம் ஆசிரியையின் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையின் சங்கிலியை அதே பகுதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய அன்றைய தினமே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களால் பல இடங்களில் சங்கிலிகள் அறுக்கப்பட்டன என்பதும் தெரியவந்தது.
மேலும் குறித்த ஆசிரியையின் சங்கிலியை அடைவு வைத்ததோடு மிருசுவில், நெல்லியடி, தவசிகுளம் ஆகிய இடங்களில் திருடிய சங்கிலிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




