
ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான இளைஞனை ஒரு வருடம் புனர்வாழ்வுக்குட்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது.
ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குறித்த இளைஞன் 3 தடவைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே ஒரு வருடம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி சிகிச்சை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.




