அனுராதபுரம் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!

அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்கள் என்று  பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது. 

சம்பவத்தில்  28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில்  அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றார். 

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த  அனுராதபுரம் பிரிவு குற்றப்பிரிவு , துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய  சந்தேக நபர்களை நேற்று  கைது செய்தது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் நண்பர்கள் என்றும், போதைப்பொருள் தொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply