யாரைக் காப்பாற்ற செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை திசை திருப்புகின்றனர்? – சபா குகதாஸ் கேள்வி!

தென்னிலங்கை இனவாதிகள் யாரைக் காப்பாற்றுவதற்காக செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்புகின்றனர் என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்  கேள்வியெழுப்பியுள்ளார். 

இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை சகோதர இனவாதிகள் ஊடகங்கள் மூலம்   இழிவுபடுத்தினர்.    அதாவது கடந்த காலத்தில் பேரினவாத அரசுக்கு மீண்டு கொடுத்த தமிழ்க் குழுக்களுக்கும் மனித புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் உடையது. 

அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

சகோதர இனவாதி விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால்  செம்மணி மனிதபுதைகுழி தொடர்பில் பொய்யுரைத்துள்ளார். 

செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக் கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகப் பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும் கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது.

தென்னிலங்கை இனவாதிகள்  யாரைக் காப்பாற்ற செம்மணி மனித  புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? – என்றார்.

Leave a Reply