அடுத்த மாத இறுதியில் மாலைதீவுக்கு செல்லும் அநுர?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜூலை மாத இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது பதவியேற்றத்திலிருந்து அவரது ஆறாவது வெளிநாட்டுப் பயணமாகும்.

ஜூலை 29 ஆம் திகதி இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் நிகழ்விலும், ஜூலை 26 ஆம் திகதி மாலைதீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களைத் தொடர்ந்தும் இந்த விஜயம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ஜனாதிபதி அலுவலகம் இந்த விஜயத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Leave a Reply