நாங்க தான் ஶ்ரீலங்கா ரவுடிகள் எனக்கூறி – பொதுமகனை கடுமையாக தாக்கிய ஓமந்தை இராணுவத்தினர்!

வவுனியா, ஒமந்தை பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

காயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

குறித்த பொதுமகன் அக்கிராம அமைப்புக்களின் முக்கிய பதவிகளில்  உள்ளார்

இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறுவதினால் அக் கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையினை கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின் அடையாள அட்டையினை காட்டுமாறு கோரியுள்ளார். எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையினை காட்ட மறுத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் பிண்ணணியில் குறித்த பொதுமகன் அன்றைய தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10க்கு மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமகன் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமிற்குள் சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தாக்குதலுக்கு உள்ளான நபர் தெரிவித்த கருத்தை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://web.facebook.com/share/v/1C6mc65rQ1/

Leave a Reply