முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் இன்று நண்பகல் சமைத்துக்கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்;ளது.
சமைத்துக் கொண்டிருந்தவர் அடுப்புக்கு அருகில் இல்லாத காரணத்தினால் அவர் எந்தவிதமான காயங்களும் இல்லாமல் தப்பியுள்ளனர்.
நாட்டு மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்து வருகின்ற நிலையில், மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. இதனால் மக்கள் அச்ச நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.




