
“சாட்சியமாகும் உயிர்கள்” – எனும் இந்த புத்தகத்தை வாசிப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல. இரத்தத்தினதும் சதையினதும் வாடை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் வீசுகிறது. 1990 களில் தாயின் கருவறைக்குள் இருந்து வளர்கின்ற குழந்தை முதல், தொண்ணூறு வயது முதிர்ந்தவர் வரை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏன் கொலை செய்யப்படுகிறோம் என்ற காரணம் தெரியாமலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த அநியாயத்தினதும், அக்கிரமத்தினதும், கொடூரத்தினதும் சாட்சியங்களை பதிவு செய்து வைத்திருக்கின்ற ஒரு நூல்.