வரியைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்கா நோக்கி செல்லும் இலங்கை

 

இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியைக் குறைக்கும் நோக்கத்தை மையப்படுத்தி, இலங்கையின் உயர்மட்ட குழு ஒன்று அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது. 

முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக்குழு எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அமெரிக்கச் சந்தைக்கு செல்லும் இலங்கைப் பொருட்களுக்கு மிகவும் சாதகமான விதிமுறைகளைக் கொண்டு வருவதற்குமான, இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது. 

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். 

அத்துடன், அமெரிக்க வரி நிவாரணத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *