
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை சேர்ந்த சிலர், நேற்று மாலை அராலி மத்தியை சேர்ந்தவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அராலி மத்தியை சேர்ந்த நபர் ஒருவர், காங்கேசன்துறையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கை நடாத்தி வைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தம்பதியரிடையே முரண்பாடு ஏற்பட்டதில் கணவன் அராலியில் உள்ள தனது வீட்டிலும், மனைவி காங்கேசன்துறையில் தனது தாயார் வீட்டிலும் தங்கியிருந்தனர்.
இதையடுத்து, தனது அக்காவுடன் அத்தான் முரண்பட்டதால் கோபமடைந்த தம்பி அராலியில் உள்ள அத்தானின் வீட்டிற்கு வந்து அத்தானின் மீதும் இன்னொருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.
அவர்களிடையே இடம்பெற்ற தாக்குதலில் காங்கேசன்துறையை சேர்ந்த ஒருவர் மற்றும் அராலியை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். பின்னர் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அறிந்த காங்கேசன்துறையை சேர்ந்தவர்கள் மீண்டும் அராலிக்கு வந்து தாக்குதல் நடாத்தினர்.
இந்நிலையில் காங்கேசன்துறையை சேர்ந்த மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.




